AK 61: மாஸாக அமர்ந்திருக்கும் அஜித்குமார்! ரசிகர்களை உற்சாகப்படுத்திய படத்தின் தலைப்பு!

0
24

அஜித்குமார்

தென்னிந்தியாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவர் கடைசியாக வலிமை என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படமானது ரசிகர்களிடையே பல விமர்சனங்களை பெற்றது. போனி கபூர் தயாரித்த இந்த படத்தை ஹெச். வினோத் இயக்கினார்.

அஜித் 61

நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தை இயக்கிய ஹெச்.வினோத்துடன் 3 ஆவது முறையாக நடிகர் அஜித்குமார் கைகோத்துள்ளார். அஜித் 61 படமானது ஹைதராபாத்தில் பூஜைகள் போடப்பட்டு தொடங்கியது. இந்த படம் ஒரு வங்கி கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என தகவல் வெளியாகியுள்ளது. அஜித்குமார் இதில் கதாநாயகராகவும், வில்லனாகவும் நடிக்கிறார் என தெரியவந்துள்ளது.

நடிகர்கள்

அஜித் நடிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். மேலும், ஜான் கொக்கென், வீரா, யோகிபாபு, மகாநதி சங்கர் போன்ற பலர் நடித்து வருகிறார்கள். ஏ கே 61 படத்தின் படப்பிடிப்பும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.

பைக் ட்ரிப்

அஜித்குமார் சமீபத்தில் ஆல் இந்தியா பைக் ட்ரிப் சென்றிருந்தார். அந்த பைக் ட்ரிப்பில் நடிகை மஞ்சு வாரியரும் சென்றிருந்தார். அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தது.

ஏகே 61 டைட்டில்

பல நாட்களாக இந்த படம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. தற்போது ஏகே 61 படத்தின் தலைப்பு வெளியாகி உள்ளது. ரசிகர்கள் அனைவரும் படத்தின் தலைப்பு குறித்து எதிர்பார்த்து கொண்டிருந்தனர். அஜித் நடிக்கும் இந்த படத்திற்கு “துணிவு” என பெயரிடப்பட்டுள்ளது.

செம மாஸ்

அஜித்குமார் கையில் துப்பாக்கியோடு செம ஸ்டைலாக அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை படக்குழுவானது வெளியிட்டுள்ளது. அதில் அஜித் தலைமுடி, தாடி அனைத்தும் வெள்ளை நிறத்தில் உள்ளது. இந்த போஸ்டர் வெளியானவுடன் ரசிகர்கள் அதனை ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here