புதுச்சேரி
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்கம் குறைந்த பின்னர் புதுச்சேரி மாநிலத்தில் செப்டம்பர் மாதம் 9-12ஆம் வகுப்பு வரை பள்ளிகளும் கல்லூரிகளும் திறக்கப்பட்டன. டிசம்பர் மாதம் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன.

ஓமைக்ரான்
கொரோனாவின் 3 ஆவது அலை, ஓமைக்ரான் தொற்று ஜனவரி மாதம் பரவத்தொடங்கியது. இதனால் புதுவையில் 1முதல் 9 ஆம் வகுப்பு வரை விடுமுறை விடப்பட்டது. 9முதல் 12 ஆம் வகுப்புகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

தேர்வு
கடந்த பிப்ரவரி மாதம் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதனை தொடர்ந்து புதுவை, காரைக்காலில் அரசு, தனியார் பள்ளிகளில் ஆண்டு இறுதித்தேர்வு கடந்த வாரம் தொடங்கியது.

சுற்றறிக்கை
புதுவை, காரைக்காலில் அரசு, தனியார் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 15 ஆம் தேதிக்கு உள்ளாக மாணவர்கள் தேர்ச்சி பட்டியலை கண்காணிப்பு அதிகாரியிடம் நிர்வாகம் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்ச்சி
மாணவர்கள் வருகை நாட்கள் குறைவு, கட்டணம் செலுத்தவில்லை உள்ளிட்ட எந்த காரணத்திற்காகவும் தேர்ச்சியை தடுத்து நிறுத்த கூடாது. எல்கேஜி – 9 வரை நாளையுடன் பள்ளிகள் நிறைவடையும். 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த மாதம் 30ஆம் தேதி வரையும், பிளஸ் 2 பொதுத்தேர்வு மே மாதம் 28ஆம் தேதி வரை நடைபெறும்.