Chennai Super Kings team! : அதிரடியாக ஆடி சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி!

0
115

வெற்றி

நேற்று நடைபெற்ற டாடா ஐபிஎல் போட்டியில் தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. நேற்றைய தினம் ஒரு துல்லியமான தினமாக சிஎஸ்கே அணிக்கு அமைந்தது.

பிளே ஆப் வாய்ப்பு

இந்த வெற்றியினை தொடர்ந்து சிஎஸ்கே 4 வெற்றிகளுடன் கடைசி மூன்றாவது இடத்தில் உள்ளது. 3 போட்டிகளில் வென்றால் ராஜஸ்தான் ஆர்சிபி உடன் இணைய வாய்ப்புகள் உள்ளது. இறுதி 4 இடங்களுக்கு செல்ல சிஎஸ்கே விற்கு அதிர்ஷ்டம் வேண்டும்.

சிஎஸ்கே அணி

டெவன் கான்வே 49 பந்துகளில் 7 பவுண்டரி 5 சிக்சர்களை விளாசி 89 ரன்கள் குவித்தார். டாஸினை வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யாமல், பீல்டிங்கை தேர்வு செய்தார் ரிஷப் பண்ட். ருதுராஜ் அருமையாக நேர் சிக்ஸ் விளாசினார். கான்வே 87 ரன்களில் அவுட் ஆனார்.

தோனி

தோனி களத்தில் இறங்கி 2 சிக்ஸ் ஒரு பவுண்டரி அடித்துள்ளார். தோனி 8 பந்துகளில் 21என்ற பினிஷிங் டச் கொடுத்தார். மொத்தம் சிஎஸ்கே அணி 208 ரன்களை எடுத்தது.

டெல்லி அணி

டேவிட் வார்னர் 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 19 ரன்கள் என அபாயகரமாக ஆடினர். ரிஷப் பண்ட், மிட்செல் மார்ஷ் இணைந்து அதிரடி காட்டினர். 73 ஓவர்களில் 72 ரன்கள் வந்தது. அபாய வீரர் ரோவ்மென் முகேஷ் சவுத்ரி தோனி கேட்சுக்கு வெளியேற 85/7 என்ற ரன்களுடன் வெளியேறியது டெல்லி அணி. மொத்தமாக 117 ரன்கள் எடுத்து 91 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here