Beast Movie Trailer Released! : பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியானது! விஜய்க்கு இரண்டு பெயர் என இயக்குனர் தகவல்!

0
33

பீஸ்ட் திரைப்படம்

நடிகர் விஜய்யின் 65 ஆவது படத்தினை நெல்சன் இயக்கி உள்ளார். பீஸ்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் ஆக்சன், காமெடி, ரொமான்ஸ் நிறைந்த படமாக தயாராகி உள்ளது. இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாகவும், ஷான் டாம் சாக்கோ வில்லனாகவும் நடித்துள்ள இந்த படத்தில் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரிலீஸ்

பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ரிலீசாக உள்ளன. இந்த படத்திற்கு அனிருத் இசையினை அமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவினை செய்துள்ளார்.

ட்ரைலர்

பீஸ்ட் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக படக்குழு நேற்று மாலை ஒரு புகைப்படத்தினை வெளியிட்டுள்ளது.

ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ

நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், சதீஷ் உள்ளிட்டோர் அடங்கிய பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி உள்ளது. வேறு சில புகைப்படங்களை வெளியிடுமாறு ரசிகர்கள் கேட்டுள்ளனர்.

பீஸ்ட் படத்தில் விஜய் பெயர்

பீஸ்ட் படத்தில் விஜய் வீர ராகவன் என்ற பெயரில் நடித்துள்ளதாக இயக்குனர் கூறியுள்ளார். அவரை சுருக்கமாக வீரா என அனைவரும் அழைப்பார்கள் என அவர் கூறியுள்ளார். அதில் விஜய் ரா ஏஜெண்டாக நடித்துள்ளதாக நெல்சன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here