சிறப்பு காட்சி
கேரளாவில் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு திரையரங்குகளில் அதிகளவிலான சிறப்பு காட்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. படத்தினை பார்க்க ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதால் கூடுதலான சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

மொழி
பெரும் எதிர்பார்ப்புக்கு பிறகு வருகிற ஏப்ரல் 13 பீஸ்ட் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழில் நேரடியாகவும், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மொழியினை மாற்றம் செய்தும் வெளியாகிறது. படத்தின் ஃபர்ஸ்ட்லுக், ட்ரைலர் போன்றவை பல சாதனைகளை புரிந்து வருகிறது.

முன்பதிவு
படம் வெளியாவதை முன்னிட்டு திரையரங்குகளில் முன்பதிவு நடைபெற்று வருகின்றது. கேரள திரையுலகில் முன்னணி நடிகர்களுக்கான ரசிகர்கள் நடிகர் விஜய்க்கும் உண்டு. நடிகர் விஜய்யின் படங்களுக்கு அங்கு தனி சிறப்பு உண்டு.

எதிர்பார்ப்பு
முன்னணி நடிகரான மோகன்லாலின் மரக்கர், ஓடியன் போன்ற படங்களுக்கு பிறகு பீஸ்ட் படத்திற்கு தான் கேரளாவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனால் கூடுதலான காட்சிகளை வெளியிட உள்ளனர். இந்த படம் மிகப்பெரிய வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.