Friday, May 20, 2022
HomeTamil NewsBest Disney + Hotstar prepaid plans! : ஜியோ, ஏர்டெல், விஐ நிறுவனங்களின் பெஸ்ட்...

Best Disney + Hotstar prepaid plans! : ஜியோ, ஏர்டெல், விஐ நிறுவனங்களின் பெஸ்ட் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ப்ரீபெய்ட் திட்டங்கள்!

நிறுவனங்கள்

ஜியோ, ஏர்டெல், விஐ நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான, மலிவு விலையில் ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு திட்டங்களை வழங்குகின்றன. ஐபிஎல் தொடங்கியதால் இந்த மூன்று நிறுவனங்கள் கொடுக்கும் திட்டங்களை பாப்போம்.

ஜியோ ரூபாய் 601 திட்டம்

இந்த திட்டத்தின் மூலம் 3ஜிபி டேட்டா, 6ஜிபி கூடுதல் டேட்டா 100 எஸ்எம்எஸ், அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்புகள் போன்றவற்றை கொண்டுள்ளது. இதில் அனைத்து ஜியோ ஆப்களுக்காக சப்ஸ்க்ரிப்ஷன், டிஸ்னி +ஹாட்ஸ்டாருக்கான இலவச சந்தாவும் 28 நாட்கள் உங்களுக்கு கிடைக்கிறது.

ஜியோ ரூபாய் 419 திட்டம்

அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் 28 நாட்கள் அன்லிமிடெட் அழைப்பு, தினமும் 100 எஸ்எம்எஸ் போன்றவை கிடைக்கிறது. தினசரி 3 ஜிபி டேட்டா, அனைத்து ஜியோ பயன்பாடுகளுக்கும் இலவச அணுகலை பெறலாம்.

விஐ ரூபாய் 601 திட்டம்

இதில் நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா, 16ஜிபி கூடுதல் டேட்டா, ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் போன்றவை கிடைக்கிறது. அன்லிமிட்டெட் காலிங், Binge All Night, வீகென்ட் Data Rollover, Extra Data போன்ற பலன்கள் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் விஐ Movies, Tv, டிஸ்னி + ஹாட்ஸ்டார் இலவச சப்ஸ்கிரிப்சன் போன்றவை 28 நாட்கள் கிடைக்கிறது.

விஐ ரூபாய் 475 திட்டம்

28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா, 100 இலவச எஸ்எம்எஸ், அன்லிமிடெட் அழைப்புகள் போன்றவை கிடைக்கிறது. Binge All Night, வீகென்ட் Data Rollover, Extra Data, விஐ Movies, Tv, டிஸ்னி + ஹாட்ஸ்டார் இலவச சப்ஸ்கிரிப்சன் போன்றவை கிடைக்கிறது.

ஏர்டெல் ரூபாய் 699 திட்டம்

தினசரி 3ஜிபி டேட்டா, தினமும் 100 இலவச எஸ்எம்எஸ், அன்லிமிடெட் அழைப்பு, அமேசான் பிரைம் வீடியோ 56 நாட்கள் கிடைக்கிறது. பிரீமியம் உறுப்பினர், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் மொபைல் பேக்கிற்கான சப்ஸ்கிரிப்சன் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூபாய் 599 திட்டம்

இந்த திட்டத்தில் நாள்தோறும் 3ஜிபி டேட்டா, அனைத்து நெட்வொர்க்களிலும் அன்லிமிடெட் அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா 30 நாட்களுக்கு கிடைக்கிறது. இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments