Salman Khan! : பாலிவுட் நடிகருக்கு கொலை மிரட்டல்! கடிதம் எழுதி வைத்த மர்ம நபர்கள்!

0
106

சல்மான் கான்

மும்பை பாந்த்ராவில் சல்மான் கான், அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். சல்மான் கானின் தந்தை சலீம் கான் வழக்கமாக கடற்கரையில் நடைபயிற்சி செய்வார். இவரது பாதுகாப்பிற்காக இரண்டு காவலர்கள் அவருடன் செல்வர்.

கடிதம்

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை சலீம் கான் நடைப்பயிற்சி மேற்கொண்ட பிறகு அங்குள்ள ஓர் இருக்கையில் அமர்ந்துள்ளார். அப்போது அதில் ஒரு கடிதம் இருந்துள்ளது. அந்த கடிதத்தில் பாடகர் சித்து மூஸேவாலா நிலைதான் உங்களுக்கும் என எழுதிவைக்க பட்டுள்ளது.

பாதுகாப்பு

மும்பை பாந்தரா காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. இதனால் சல்மான் கான் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் உள்ள மான்ஸா மாவட்டத்தில் பிரபல பாடகர் சித்து மூஸேவாலா காரில் சென்றுகொண்டிருந்த போது துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here