Chief Minister Stalin! : துபாயில் எக்ஸ்போ கண்காட்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த முதல்வர் ஸ்டாலின்!

0
121

துபாய்

தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக 4 நாட்கள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற துபாய் எக்ஸ்போ கண்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழ்நாடு அரங்கை திறந்து வைத்தார்.

காட்சிப்படங்கள்

இந்த அரங்கில் தொழில் துறை, மருத்துவம், சுற்றுலா, கலை, கலாச்சாரம், கைத்தறி, கைவினை பொருள்கள், தொழிற்பூங்காக்கள், உணவுபதப்படுத்துதல் ஆகிய முக்கிய துறைகளில் தமிழகத்தின் சிறப்பை எடுத்துக்காட்டும் வகையில் தொடர்ச்சியாக காட்சி படங்கள் போடப்படுகின்றன.

Video : Click Here

தமிழக முதல்வர் உரை

தமிழ்நாட்டின் பெருமைகளை உலகிற்கு கூறும் வகையில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. துபாய் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கினை திறந்து வைக்க சென்றேன். அயலக தமிழ் உறவுகள் அளித்த உற்சாக வரவேற்பில் ஒரு நொடி வெளிநாட்டில் இருப்பதே மறந்து போனது என டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

ஆலோசனை

முதல்வர் ஸ்டாலின் துபாய் பன்னாட்டு நிதி மையத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார துறை அமைச்சர் அப்துல்லா, டூக் அல் மர்ரி போன்றோரையும், வெளிநாட்டு வர்த்தக துறை அமைச்சர் டாக்டர் தானி, அகமது அல் சியோதி போன்றவர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

டுவிட்டர் பதிவு

சந்திப்பிற்கு பின் டுவீட் செய்த ஸ்டாலின் நம்பர் 1 தமிழ்நாடு என்ற நிலையை அடைய அமீரக பயணம் பயனுள்ளதாக அமையும் எனும் நம்பிக்கை அமைச்சர்களின் சந்திப்பில் வலுப்பெற்றது. தமிழக அமீரக உறவை போல வலுவானதாக சந்திப்பு அமைந்தது என கூறியுள்ளார்.

ஏஆர் ரஹ்மான் ஸ்டூடியோ

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அழைப்பின் பெயரில் துபாயில் உள்ள அவரின் ஸ்டூடியோவுக்கு முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அங்கு அவர் தயாரித்துள்ள “மூப்பில்லா தமிழே தாயே” என்ற ஆல்பத்தை முதல்வருக்கு காண்பித்தார். தமிழுக்கும், இசைக்கும் உலகில் எல்லை இல்லை என ஸ்டாலின் கூறியுள்ளார்.

புர்ஜ் கலீஃபா கோபுரம்

உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபா கோபுரம் மீது தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, செம்மொழி, அகழ்வாராய்ச்சி போன்ற காட்சி படங்கள் ஒளிபரப்பப்பட்டதை ஸ்டாலின் பார்வையிட்டார்.

Video : Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here