Plane crash! : மீண்டும் இணைய நினைத்த தம்பதிகள் விமான விபத்தில் உயிரிழப்பு!

0
159

விவாகரத்து

அசோக் திரிபாதி ஒடிசாவில் ஒரு நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். பைரவி என்பவர் மும்பை பிகேசி வளாகத்தில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு தனுஷ், ரித்திகா என இரண்டு பிள்ளைகள் உள்ளன. இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர்.

சுற்றுலா

குழந்தைகளுடன் பைரவி மும்பையில் ஒரு குடியிருப்பில் வசித்து வந்தார். கணவன், மனைவி இருவரும் குழந்தைகளுக்காக சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளனர். சுற்றுலா நகரமான ஜோம்சம் நகருக்கு விமானத்தில் அசோக் திரிபாரி குடும்பம் புறப்பட்டது.

விமானம்

விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பினை இழந்து விட்டது. அந்த விமானம் நேபாளத்தின் மலைப்பகுதி ஒன்றில் விழுந்தது பின்னர் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. மீண்டும் இணைந்து தங்களின் வாழ்க்கையை வாழ நினைத்தவர்கள் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here