Crime news in tamil 2022 : தொழிலதிபரிடம் அதிகாரிகள் போல் நடித்து ரூபாய் 20 லட்சம் கொள்ளை!

0
152
thiruttu

பஞ்சலிங்கம்

கோவை வடபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சலிங்கம். இவரது வயது 63 ஆகும். இவர் கிணத்துக்கடவு அருகேயுள்ள முத்தூரில் கல்குவாரியினை டெண்டர் எடுத்து நடத்தி வருகிறார்.

சோதனை

ஜனவரி 15ம் தேதி பஞ்சலிங்கம் வீட்டுக்கு 5 பேர் வந்துள்ளனர். அவர்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் என கூறி வீட்டை சோதனை செய்துள்ளனர்.

பறிமுதல்

அவரது வீட்டில் இருந்த 20 லட்சம் தொகை, செல்போன்,சிசிடிவி கருவிகள் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் பஞ்சலிங்கத்தை பொள்ளாச்சியில் உள்ள அலுவலகத்துக்கு நேரில் விசாரணைக்கு வருமாறு கூறி சென்றுள்ளனர்.

தகவல்

அவர்களது நடவடிக்கையில் சந்தேகமடைந்த பஞ்சலிங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அந்த இடத்திற்கு வந்து விசாரித்துள்ளனர்.

விசாரணை

விசாரணையில் மர்மநபர்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் என கூறி பணத்தை பறித்து சென்றது தெரிய வந்துள்ளது. திருட்டு கும்பலை குறித்து போலீசார் அங்கு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here