Crime news in tamil 2022: மகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தந்தை: கணவனை ‘சுத்தியலால்’ பதம் பார்த்த மனைவி!!! …….

0
204
Sexual abuse

சென்னையில் குடிபோதையில் பெற்ற மகளை பலாத்காரம் செய்ய முயன்ற கணவனை மனைவி அடித்து கொலை செய்துள்ளார். அவர்களின் தற்காப்புக்காக கொலை செய்ததால் விடுவிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளன.

குடிபோதை

தமிழகத்தில் சில ஆண்டுகளாக குடிபோதையில் தவறு செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

பாலியல் வன்கொடுமை

போதையில் மற்ற பெண்களிடம் மட்டும் இல்லாமல் தன் மக்களிடமே பாலியல் கொடுமை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

சென்னையில் அதிர்ச்சி

இந்த நிலையில் குடிபோதையில் பெற்ற மகளை பாலியல் கொடுமை செய்ய முயன்ற தகப்பனை மனைவி அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ஓட்டேரி பகுதியில் ஒன்பதாவது தெருவில் உள்ளவர் பிரதீப். இவருக்கு 20வருடங்களுக்கு முன் பிரீத்தா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

மகளிடம் அத்துமீறிய தந்தை

இவர்களுக்கு 20 வயது ஆன கீர்த்தி என்ற மகளும், 10 வயது ஆன கவுதம் என்ற மகனும் உள்ளன. கீர்த்திக்கு திருமணம் பண்ணிவைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்த நிலையில் இவரது தந்தை குடிபோதைக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

குடும்பத்தில் பிரச்சனை

இதன் காரணமாக வீட்டில் தினமும் சண்டை வந்துள்ளது. இதன் இடையில் நேற்று குடித்துவிட்டு போதையில் வீட்டிற்குள் வந்ததந்தை தனது மகள் என்று கூட பார்க்காமல் தவறான முறையில் நடக்க முயன்றிருக்கிறார். பின் மகள் சத்தம் போட்டதை தொடர்ந்து பிரீத்தா மகளை கணவரிடம் இருந்து காப்பாத்த போராடியுள்ளார்.

சுத்தியலால் அடித்துக் கொலை

முரட்டுத்தனமாக நடந்து கொண்ட கணவரை ஆத்திரத்தில் வீட்டிலிருந்த சுத்தியலை எடுத்து தலையில் ஓங்கி அடித்து கொலை செய்துள்ளார். அருகில் உள்ளோர் கொலை குறித்து காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

மனைவியை விடுவிக்க முடிவு

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். கொலை குறித்து பாதிக்கப்பட்ட கீர்த்தி மற்றும் அவருடைய மகனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் மகளைக் காப்பாற்ற தற்காப்புக்காக கொலை செய்ததால் விடுதலை செய்ய காவல்துறையினர் முடிவு எடுத்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here