Delhi Capitals team-Punjab team! : பஞ்சாப் அணியை வீழ்த்திய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி!

0
91

ஐபிஎல்

பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்தினை வீசியது. வார்னர், சர்பராஸ் இருவரும் இணைந்து டெல்லி இன்னிங்சை தொடங்கினர்.

அதிர்ச்சி தொடக்கம்

லிவிங்ஸ்டன் வீசிய முதல் பந்திலேயே வார்னர் டக் அவுட்டாகி வெளியேறியது டெல்லி கேப்பிடல்சுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. பின்னர் சர்பராஸ் கானுடன் மிட்செல் மார்ஷ் இணைந்தார். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி 2ஆவது விக்கெட்டுக்கு 50 ரன்களை சேர்த்தது.

டெல்லி அணி

கேப்டன் பன்ட் 7ரன், பாவெல் 2 ரன் எடுத்து லிவிங்ஸ்டன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தது. ஷர்துல் மொத்தம் 3 ரன்னில் வெளியேறினார். டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. அக்சர் 17 ரன் மற்றும் குல்தீப் 2ரன்னுடன் ஆட்டமிழக்காமல் விளையாடினர்.

பஞ்சாப் அணி

அடுத்ததாக களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி 17 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த ஆணியில் ஜிதேஷ் சர்மா அதிகபட்சமாக 44 ரன்களை விளாசினார். டெல்லி அணி பந்துவீச்சில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட், குல்தீப் யாதவ் 2 விக்கெட் வீழ்த்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here