Friday, May 20, 2022
HomeTamil NewsDemonstration! : சொத்துவரி உயர்வை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டம்!

Demonstration! : சொத்துவரி உயர்வை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டம்!

விருதுநகர்

சொத்துவரி உயர்வை கண்டித்து விருதுநகரில் புதிய தமிழகம் சார்பில் ஆர்பாட்டமானது நடைபெற்றது. இதில் மாவட்ட இணை செயலாளர் விஜி குணம், நிர்வாகி செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் ஜோதிபாஸ், மண்டல வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சுந்தரம் போன்றோர் பேசினார்கள். ஒன்றிய செயலாளர் சுதாகர் நன்றியினை கூறியுள்ளார்.

சிவகாசி

மாநகர பொறுப்பாளர்கள் அய்யாச்சாமி, லட்சுமணன் ஆகியோர் சிவகாசியில் தலைமை வகித்தனர். மாநில மகளிர் அணி நிர்வாகி காளீஸ்வரி, மாநில தொண்டரணி செயலாளர் கார்திகைராஜா போன்றோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொறுப்பாளர்கள் முருகன், பிரபு, முன்னாள் நகர செயலாளர்கள், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர், துணை செயலாளர் போன்றோர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

மாவட்ட செயலாளர் செல்வகுமார் இங்கு தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்துள்ளார். மாநில இளைஞர் அணி அமைப்பாளர்கள், கட்சியினர் அங்கு பங்கேற்றனர்.

சாத்தூர்

இங்கு நகர செயலாளர் பரமசிவன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளரான முனியாண்டி முன்னிலை வகித்தார். 50 நபர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

காரியாபட்டி

இங்கு வக்கீல் ஜெகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொறுப்பாளர்கள் நவீன்ராஜ், சுரேந்திரன், ஒன்றிய செயலாளர் திருமுருகன், நரிக்குடி ஒன்றிய பொறுப்பாளர் வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments