Wednesday, May 18, 2022
HomeTempleAstrology news : ராகு, கேது பெயர்ச்சி விழாவில் திரண்டு வந்த பக்தர்கள்!

Astrology news : ராகு, கேது பெயர்ச்சி விழாவில் திரண்டு வந்த பக்தர்கள்!

ராகு தோஷ பரிகார தலமாக விளங்கும் திருநாகேஸ்வரத்தில் நேற்றைய தினம் நடந்த ராகு பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து ராகு பகவானை தரிசனம் செய்தனர்.

கோவில்

தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரத்தில் ராகு பகவான் சிவபெருமானை பூஜித்த திருத்தலமாக கிரிகுஜாம்பிகை உடனாய நாகநாத சுவாமி கோவில் அங்கு அமைந்துள்ளது.

சாபம்

புராண காலத்தில் சுசீல முனிவரின் குழந்தையை பாம்பாகிய ராகு தீண்டியது. இதனால் ராகுவிற்கு சாபம் ஏற்பட்டு, சாபம் நிவர்த்தி பெற நான்கு தலங்களில் வழிபட்டு பின்னர் கடைசியில் திருநாகேஸ்வரத்தில் நாகநாத சுவாமியை மகாசிவராத்திரி அன்று வழிபட்டதால் சாபம் நீங்கியது.

தலத்தில் அருள்பாலிப்பவை

நவக்கிரகங்களுள் முதன்மையானவராக திகழும் ராகு பகவான் நாகவல்லி, நாகக்கன்னி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாக இந்த தலத்தில் அருள்பாலிக்கிறார்.

ராகு பெயர்ச்சி

ராகு பகவான் ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி நகர்வதை ராகு பெயர்ச்சி என அழைப்பர். நேற்றைய தினம் அன்று ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.

நேற்றைய தினம் நடைபெற்றவை

பால், மஞ்சள், சந்தனம்,தயிர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருள்களால் ராகு பகவானுக்கும், நாகவள்ளி, நாககன்னிக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பிற்பகல் 3.13 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்ட நிலையில் மாலை நேரத்தில் ராகு பகவான் வெள்ளி சேஷ வாகனத்தில் வீதிஉலா புறப்பாடு நடைபெற்றது.

பக்தர்கள்

ராகு பெயர்ச்சியை முன்னிட்டு 23 முதல் 26 ம் தேதி வரை லட்சார்ச்சனை நடைபெற உள்ளது. நேற்றைய தினம் மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் போன்ற ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய குவிந்தனர். பல ஆயிரம் பக்தர்கள் நேற்றைய தினம் தரிசனம் செய்ய குவிந்ததால் திருநாகேஸ்வரம் பக்தர்களால் நிரம்பியது.

திருப்பாம்புரம்

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே திருப்பாம்புரம் வண்டுசேர் குழலி உடனுறை சேஷபுரீஸ்வரர் கோவில் உள்ளது. அங்கு தனி சன்னதியில் ராகு, கேது சரிசமமாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இந்த கோவிலுக்கு தென் காளஹஸ்தி என்ற சிறப்புப்பெயர் உண்டு. இந்த கோவிலிலும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது.

கேது பகவான்

மயிலாடுதுறை, சீர்காழி தாலுகா கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் சவுந்தரநாயகி அம்பாள் சமேத நாகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த தலத்தில் கேது பகவான் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

நடைபெற்றவை

கேது பகவானும் ஒன்றரை ஆண்டுக்கு ஒருமுறை பின்னோக்கி பெயர்ச்சி அடைய கூடியவர். நேற்று பிற்பகல் 3.14 மணிக்கு பெயர்ச்சி அடைந்ததை ஒட்டி மகா தீபாராதனை, சிறப்பு ஹோமங்கள், அபிஷேக ஆராதனை நடைபெற்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments