30 Years old! : 30 வயதில் கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா?

0
61

வாழ்க்கை

இந்தியாவில் மனிதனின் சராசரி வாழ்நாள் காலம் 69-70 ஆக இருக்கும் நிலையில், ஆக்டிவ் ஆன காலம் என்று 60 ஆண்டுகளை வைத்துக்கொள்ளலாம். ஒருவர் 30 வயதை எட்டினால் கிட்டத்தட்ட பாதி வாழ்க்கையை கடந்து செல்கின்றனர். இந்த வயதில் உடல் அளவிலும், மனதளவிலும் பல மாற்றங்கள் ஏற்படும். ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே வளர்ச்சியினை காண முடியும்.

காலை உணவு

காலையில் சாப்பிடும் உணவுகளை தவிர்ப்பது மிகவும் ஆரோக்கியமற்றது ஆகும். இதனை தவிர்ப்பதன் மூலம் வளர்சிதை மாற்ற விளைவு, நோயெதிர்ப்பு செயல்பாட்டு குறைவு, எடை அதிகரிப்பு, அடிக்கடி தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

கொழுப்பு நிறைந்த உணவுகள்

30 வயதை அடைந்தவர்கள் கொழுப்பு நிறைந்த உணவுகளை குறைத்துவிட வேண்டும். அதற்கு பதிலாக பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை சாப்பிடலாம். துரித உணவுகளை எடுத்துக்கொள்வதை குறைத்து கொள்ளவேண்டும்.

சண்டை

சிறு விஷயங்களுக்கு சண்டையிட்டுக்கொள்வதை தவிர்க்க வேண்டும். சிக்கல்களை நாகரீகமான பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துவிட்டு ஒரு முதிர்ச்சியான நபராக நடந்துகொள்ள வேண்டிய நேரம் ஆகும்.

மது அருந்துதல்

இன்றைய காலத்தில் இளைஞர்கள் அனைவரும் பீர் குடிப்பதனை ஒரு ட்ரெண்டிங் ஆக பின்பற்றுகின்றனர். 30 வயதுக்கு பிறகு உடலில் மாற்றங்கள் நிகழ்வதால் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

அரட்டை

நண்பர்களுடன் போனில் சாட் செய்வது, அரட்டை அடிப்பது, நண்பர்களுடன் நேரம் செலவழிப்பதை மாதத்திற்கு ஒருமுறை வைத்துக்கொள்வது சிறந்தது. அவசியமான நேரங்களில் சாட் செய்வதற்கு பதிலாக போனில் அழைத்து பேசுவது நல்லதாகும். அந்த நேரங்களை உபயோகமாக செலவழிக்க வேண்டும்.

வாகனம் ஓட்டுதல்

பைக்கிலோ, காரிலோ சத்தம் எழுப்பிக்கொண்டு வளைந்து ஓட்டுவது, சாலைவிதிகளை கடைபிடிக்காமல் செல்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், வேகமாக ஓட்டுதல் போன்றவற்றை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here