Tata Steel: டாடா ஸ்டீல் எடுத்துள்ள அதிரடி முடிவு என்ன தெரியுமா?

0
37

டாடா ஸ்டீல்

இந்த நிறுவனம் உலகின் ஆறாவது மிகப்பெரிய நிறுவனம் ஆகும். இது உள்நாட்டு உற்பத்தியில் தனியார் துறை நிறுவனம் ஆகும். இது ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாம்செட்பூரில் உள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் இலாபகரமான தனியார் துறை நிறுவனம் ஆகும்.

நிர்வாக கூட்டம்

நேற்றைய தினம் டாடா குழுமம் ஒரு நிர்வாக கூட்டத்தை கூட்டியது. அந்த கூட்டத்தில் செயல்திறன், செலவுகளை குறைப்பதற்காக ஏழு உலோக நிறுவனங்களை இணைப்பதாக அறிவித்துள்ளது. இதனை அதன் உலோக வணிகத்தை ஒருங்கிணைக்கும் முயற்சியில் செய்துள்ளது.

ஏழு கம்பெனிகள்

இந்த குழுவில் Tata Steel Long Products,Tata Metaliks,The Tinplate Company of India, TRF, Indian Steel & Wire Products, Tata Steel Mining and S&T Mining போன்ற ஏழு கம்பெனிகளை இணைக்க முடிவு செய்துள்ளது. டாடா ஸ்டீல் நிறுவனத்துடன் இணைக்கப்படும் நிறுவனங்களின் பங்குகளுக்கு ஈடாக குறிப்பிட்ட அளவு பங்குகள் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

பங்குகள்

  • TRF நிறுவனத்தின் 17 பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு 10 டாடா பங்குகள் வழங்கப்படும்.
  • Tata Steel Long Products நிறுவனத்தின் 10 பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர் 67 டாடா ஸ்டீல் பங்குகள் கொடுக்கப்படும்.
  • Tinplate நிறுவனத்தின் 10 பங்குகளுக்கு டாடா ஸ்டீலின் 33 பங்குகள் வழங்கப்படும்
  • Tata Metaliks நிறுவனத்தின் 10 பங்களுக்கு டாடா ஸ்டீலின் 79 பங்குகள் வழங்கப்படும்.

டாடாவுடன் இணைப்பதன் மூலம் வரும் நன்மைகள்

  • இதன் மூலம் டாடா நிறுவனத்தின் வேலைகள் எளிதாக முடியும்.
  • நிறுவனத்தின் செயல்பாடுகள் வேகமாகவும், வெளிப்படை தன்மையுடனும், நிலையானதாகவும் காணப்படும்.
  • ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்வது இதன் மூலம் தடுக்கப்படும்.
  • நிர்வாகத்தின் செலவும் குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here