Young Children! : பரிதாபமாக இறந்த பதினொன்று பச்சிளம் குழந்தைகள்! மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து!

0
166

தீ விபத்து

செனகல் நாட்டில் உள்ள பொது மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயினை அணைத்தனர். இந்த சம்பவத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.

அதிபர் மேக்கி சால்

இதனை குறித்து அந்த நாட்டு அதிபர் மேக்கி சால் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார். புதன்கிழமை நள்ளிரவு தீடீரென ஏற்பட்ட தீ விபத்தில் புதிதாக பிறந்த 11 குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். குழந்தைகளின் தாய்மார்கள், அவர்களது குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரல்

இதனைப்போன்றே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வடக்கு நகரமான லிங்குவேரில் உள்ள ஒரு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here