Elon Musk! : டுவிட்டரில் அதிக பங்கினை கொண்ட எலான் மஸ்க்! மாற்றங்களை அதில் எதிர்பார்க்கலாமா?

0
93

அதிக பங்கு

எலான் மஸ்க் வாங்கிய கிட்டத்தட்ட 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள 9.2 சதவீத பங்குகள் அவரை டுவிட்டரின் மிகப்பெரிய பங்குதாரராக ஆக்கியுள்ளது. வான்கார்ட் குழுமத்தின் 8.8 சதவீத பங்குகளை விட, 8.4 சதவீத பங்குகளை வைத்துள்ள மோர்கன் ஸ்டான்லியை விட, நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜாக் டோர்ஸி 2.2 சதவீத பங்குகளை விட அதிகமாக உள்ளது.

வருவாய்

டிசம்பர் 2021 நிலவரப்படி டுவிட்டரின் ஆண்டு வருமானம் 5 பில்லியன் டாலராக இருந்தது. 2023 ஆம் ஆண்டுக்குள் 7.5 மில்லியன் டாலர் வருவாயை எட்ட நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. ஒரு புதிய சமூக ஊடகத்தை உருவாக்குவது குறித்து எலான் மஸ்க் சிந்தித்து வருவதாக கூறிய சில நாட்களுக்கு பின் இந்த பங்குகள் கொள்முதல் செய்யப்பட்டது.

சுதந்திரம்

பங்கு, போர்டு இருக்கை ஆகியவை மைக்ரோ பிளாக்கிங் தளமான டுவிட்டரில் மாற்றங்கள் செய்ய, மாற்றங்களை முன்மொழிய எலான் மஸ்க்கிற்கு அதிக சுதந்திரத்தை அளிக்கும். 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் டுவிட்டர் பேச்சு சுதந்திர கொள்கைகளை கடுமையாக செயல்படுத்துகிறது. பொதுத்தளம் சுதந்திரமான பேச்சு கொள்கைகளை கடைபிடிக்க தவறிவிட்டது என பதிவிட்டார்.

டுவிட்டரின் பயன்

டுவிட்டர் ஆடியோ ட்வீட்கள், ஸ்பேஸ் மீட்டிங் போன்ற புதிய தயாரிப்புகளுடன் விரிவடைந்துள்ளது. பங்குகளை வாங்கும் நிதியானது தளத்தை விரிவுபடுத்தவும், மேம்படுத்தவும் உதவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here