Roger Federer: ஓய்வு பெறும் வேளையில் தோல்வி! போட்டியில் இருந்து விடைபெற்ற ரோஜர் பெடரர்!

0
35

டென்னிஸ் போட்டி

நேற்றைய தினம் லண்டனில் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் சுவிஸ் நாட்டு வீரர் ரோஜர் பெடரர் கலந்துகொண்டார். இந்த போட்டியில் ஐரோப்பிய அணியும், உலக அணியும் நேருக்கு நேர் மோதின. ரோஜர் பெடரர் உலக அணியில் இடம்பெற்றிருந்தார்.

தோல்வி

இரட்டையர் பிரிவில் ரபேல் நடாலுடன் இணைந்து அமெரிக்காவின் விளையாட்டு வீரர் ஜாக் சாக் – பிரான்சிஸ் டியாபோ உடன் மோதினார். இந்த போட்டியில் ரோஜர் பெடரர்- ரபேல் நடால் இணையானது தோல்வியை தழுவியது. இவர்கள் 6-4, 6-7,9-11 என்ற கணக்கில் தோல்வி அடைந்துள்ளனர்.

கடைசி போட்டி

லேவர் கோப்பை டென்னிஸ் தொடர் ரோஜர் பெடரரின் கடைசி போட்டியாகும் என கூறியுள்ளார். அவருடைய கடைசி போட்டியில் தோல்வியுடன் ஓய்வினை பெற்றுள்ளார். இவர் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ளார். அவருக்கு வருத்தம் ஒன்றும் இல்லை என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here