Tamil News: மனதை உருக வைக்கும் தந்தையின் செயல்! இவர் செய்த செயலை யாரும் செய்திருக்கவே முடியாது!

0
41

சூரஜ் பப்ஷா

மேற்கு வங்கத்தில் வசித்து வருபவர் சூரஜ் பப்ஷா என்பவர். இவருக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து ஆறு மாதம் ஆனவுடன் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அதிரவைக்கும் நோய்

மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்தபோது குழந்தைக்கு ‘பிலியறி அட்ரேசியா’ என்ற கல்லீரல் நோய் ஏற்பட்டிருப்பதாக கூறினர். இந்த நோயானது 12,000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு தான் ஏற்படும் என கூறப்படுகிறது. இதற்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக 15 லட்சம் ரூபாய் செலவாகும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தந்தையின் செயல்

அக்குழந்தையின் தந்தை அவருக்கு சொந்தமான நிலத்தை விற்று பணத்தை கொடுத்திருக்கிறார். மருத்துவ சிகிச்சைக்கான கல்லீரல் கிடைக்கவில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதை கேட்டதும் அவரது மகனுக்காக தனது கல்லீரலை கொடுக்கிறேன் என கூறியுள்ளார். அதனை மருத்துவர்களிடம் சோதனை செய்து பார்க்க கூறியுள்ளார்.

அறுவை சிகிச்சை

அக்குழந்தையின் தந்தையை பரிசோதித்து பார்த்த பின்னர் மாற்று அறுவை சிகிச்சை செய்ய தீர்மானிக்கப்பட்டது. மருத்துவர்கள் 12 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்து குழந்தைக்கு தந்தையின் கல்லீரலை பொறுத்தியுள்ளனர். அவரது மகன் தான் அவருக்கு முக்கியம் என அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here