Friday, May 20, 2022
HomeMoviesAchcham Madam Naanam Payirppu movie! : அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு திரைப்படத்தின்...

Achcham Madam Naanam Payirppu movie! : அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு திரைப்படத்தின் முதல் பார்வை!

ஆசை

ஒரு பழமையான குடும்பத்தின் பின்னணி கொண்ட இளம் பெண் அக்சரா ஹாசன். அவருக்கென்று விருப்பம் எதுவும் இல்லாமல் அவருடைய தாய் சொல்வதை கேட்டு நடக்கிறார். வீட்டுக்குள்ளேயே இருக்கும் அக்சரா திருமணத்திற்கு முன் அவரது காதலனுடன் உறவு வைத்துக்கொள்ள ஆசை படுகிறார்.

ஆலோசனை

அவர் பாலுறவு குறித்து மாறுபட்ட கருத்துக்களை கொண்ட அவரது தோழிகளிடம் ஆலசோனை கேட்கிறார். அவர் தோழிகளின் ஆலோசனை படி நடந்தாரா, அவரது வாழ்க்கையில் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்ற குணங்கள் அணுகப்படுவது எப்படி என்ற கதையையே இந்த படமானது பேசுகிறது.

முயற்சி

பவித்ரா என்கிற பாத்திரத்தில் அக்சரா ஹாசன் நடிக்கிறார். அவருக்கு இசையானது பிடிக்குமா பிடிக்காதா என்பதுகூட தெரியாமல் அவரது பாட்டியிடம் கர்நாடக இசையை கற்றுக்கொள்வதும், தோழிகளுடன் உரையாடல் நடத்துவதும் என நல்ல முயற்சிகளை எடுத்துள்ளார்.

உரையாடல்கள்

தோழிகளாக நடித்த அஞ்சனாவும் ஜெசிகாவும் இதில் அதிகம் காணப்படுகிறார்கள். தோழிகள் மூவருக்கும் இடையேயான உரையாடல்கள் திரைப்படத்தில் மிகவும் அழுத்தமானவை.

முதல் படம்

சுஷாவின் இசையும், ஸ்ரேயா தேவ் துபேயின் ஒளிப்பதிவும் இந்த கதைக்கு சிறப்பை தருகிறது. இந்த படத்தினை இயக்கியிருப்பது ராஜா ராமமூர்த்தி. இந்த படமானது இவருக்கு முதல் படம் ஆகும்.

தீர்மானம்

ஆணாதிக்க பின்னணியில் வந்த இந்த கருத்துக்கள் எப்படி பெண்களை தீர்மானிக்க முடியும் என்பதை இந்த படம் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.இந்த படமானது பொதுப்புத்தியில் நிலவும் நல்ல பெண்- கெட்ட பெண் கட்டுக்கதைகளை முற்போக்கான முறையில் உடைத்து பேசுகிறது.

பெண்களின் உணர்வுகள்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை பெண்களின் ஆசையையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தும் வகையில் எந்த திரைப்படங்களும் பெரிதாக இல்லை. ஓர் எளிய கதையை விவரிக்க முயற்சி எடுத்ததற்கு பாராட்டுக்கள்.

மேலோட்டம்

படத்தினை பார்க்கையில் ஒருவித வினோத உணர்வு தொற்றிக்கொள்வதுடன் மெதுவாக நகர்வதும் சிறப்பாக இல்லை. அக்சராவும் அவரின் பெற்றோருக்கும் இடையேயான உரையாடலும், அக்சரா தோழியுடன் கோபம் கொள்ளும் காட்சிகளும் மேலோட்டமாக செல்கிறது.

காட்சி

அவரது தாய்க்கு பயந்த பெண், அவரது குடும்பத்திற்கு
பழக்கமுள்ள கடைக்கு இயல்பாக சென்று ஆணுறை வாங்குவது போன்ற காட்சிகள் வைப்பதன் நோக்கம் சரியானதாக இருந்தாலும், செயற்கையாக கையாண்ட விதம் துருத்தி நிற்கிறது. அக்சரா ஏன் எப்போதும் பச்சை நிற உடையில் இருக்கிறார் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

சிக்கலான கட்டங்கள்

ஓர் இளம் பெண்ணின் வாழ்க்கையின் சிக்கலான கட்டங்களை சித்தரிக்கும் ஒரு தீவிர முயற்சியாக இருந்தும், இது மனதில் நிற்காமல் செல்கிறது அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments