Gold prices! : அதிரடியாக குறைந்த தங்கம் விலை! சவரனுக்கு 320 ரூபாய் குறைவு!

0
83

விற்பனை

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே சென்னையில் தங்கத்தின் விலை திடீர் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக தங்கம் விலையானது அதிகரிக்க தொடங்கியது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் தங்கம் விற்பனையானது.

புதன்கிழமை

சவரனுக்கு ரூபாய் 240 குறைந்து புதன்கிழமை விற்பனையான நிலையில் தங்கம் ரூபாய் 38,440 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 30 குறைந்து 4,805 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 10 பைசா உயர்ந்து ரூபாய் 66.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூபாய் 100 உயர்ந்து 66,200 ஆக உள்ளது.

இன்று

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு 320 ரூபாய் குறைந்துள்ளது. தற்போது தங்கம் 38,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமிற்கு ரூபாய் 40 குறைந்து 4,765 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூபாய் 66.00 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூபாய் 500 குறைந்து 66,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here