Hardik Pandya! : வெற்றி பெற்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்டியா கருத்து!

0
108

குஜராத் அணி

ஐபிஎல் போட்டிகளில் தற்போது பிளேஆஃப் சுற்று நடைபெற்றுவருகிறது. முதல் ஆட்டத்தில் முதல் இரண்டு இடங்களை பிடித்த குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. டாஸ் வென்ற குஜராத் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை எடுத்தது.

வெற்றி

பேட்டிங் செய்த குஜராத் அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற்றதை அடுத்து குஜராத் அணியானது இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

ஹர்த்திக் பாண்டியா கூற்று

அணியில் இருக்கும் 23 வீரர்களும் வெவ்வேறு குணாதிசயம் கொண்டவர்கள். இவர்கள் வெவ்வேறு திறமைகளுடன் உள்ளார்கள். எங்கள் அணியில் இருக்கும் நல்ல வீரர்களால் வெற்றியை பெற முடிந்தது என கூறினார். வெளியே உள்ள வீரர்களும் நன்றாக விளையாட வேண்டும் என விரும்புவதால் இவ்வளவு தூரம் வந்துள்ளதாக கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here