Health tips 2022 : நுரையீரல் பிரச்சனையை குறைக்க சாப்பிடவேண்டிய சில உணவுகள்!

0
88
unavukal

கொரோனா அதிகரித்து வருவதால் நுரையீரலை பாதுகாக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மூச்சு திணறல் தொடர்பான பிரச்சனைகளை குறைக்க சில உணவுகள் உதவுகின்றன.

ஆப்பிள்

நுரையீரல் செயல்பாடுகளை மேம்படுத்த உதவும் ஊட்டச்சத்துக்கள் ஆப்பிள் பழத்தில் இருக்கிறது. ஆப்பிளில் வைட்டமின் சி,ஈ போன்றவை உள்ளதால் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.

பூண்டு

இதில் பிளவனாய்டுகள் உள்ளதால் நுரையீரலை பாதிக்கக்கூடிய நச்சுக்களை அகற்ற உதவுகிறது. புற்றுநோயை தடுக்கவும் பூண்டு பெரிதும் உதவுகிறது.தினசரி பூண்டு சேர்த்து கொள்வது அவசியமாக உள்ளது.

வால்நட்ஸ்

நுரையீரல் கோளாறுகளை தடுக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இந்த வால்நட்ஸில் உள்ளன. மூச்சு திணறலை தடுக்க இது பெரும் பங்கினை வகிக்கிறது.

தண்ணீர்

தண்ணீர் பருகுவது மூச்சு திணறலுடன் தொடர்புடையதால் அதிக தண்ணீர் அருந்த வேண்டும். தண்ணீர் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க பெரிதும் உதவுகிறது.

பெர்ரி

பெர்ரியில் ஆண்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ளதால் மூச்சுத்திணறலை குணப்படுத்த இது உதவுகிறது. நுரையீரலை நீண்ட காலம் ஆரோக்கியமாக வைக்கவும் இது பெரிதும் உதவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here