வழக்கம்போல் இயங்கும் பள்ளி கல்லூரிகள் -10 மாவட்டங்களுக்கு விடுமுறை

0
75
rain- school holiday

தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால் பள்ளி கல்லூரிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் விடுமுறை அளிக்கப்படாத பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

19 மாதங்களாக வீடுகளில் முடங்கிய மாணவர்களுக்கு நவம்பர் 1 முதல் , ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அனைத்து மாணவர்களும் மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு சென்றனர்.

தீபாவளி பண்டிகை மற்றும் மழை காரணமாக பல்வேறு நாட்கள் பள்ளிகள் திறந்த பிறகு விடுமுறை அளிக்கப்பட்டது. ரெட் அலெர்ட் எச்சரிக்கை வாபஸ் விடப்பட்டதால் இன்று முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வழக்கம் போல் வகுப்புகள் நடைபெறும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கலெக்டர் மழை வெள்ள பாதிப்பால் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளித்துள்ளார் . அவ்வாறு விடுமுறை அளித்த மாவட்டங்களை தவிர அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம்,வேலூர், ராணிப்பேட்டை,காஞ்சிபுரம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர், கடலூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here