Honda: இப்படியா பணத்தை திரும்ப கேட்பது! வருத்தமடைந்த ஹோண்டா ஊழியர்கள்!

0
53

ஹோண்டா

ஜப்பான் கார் தயாரிப்பு நிறுவனம் ஹோண்டா. இது கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம் அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஒரு குறிப்பை அனுப்பியுள்ளது. அந்த குறிப்பில் ஊழியர்களுக்கு போனஸ் தொகையை அதிகமாக செலுத்தியதாகவும், திரும்ப கொடுக்கவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்

அவர்கள் கொடுத்த தொகையினை சரியான நேரத்தில் கொடுக்காவிடில், ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளத்தில் இருந்து கழிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. போனஸ் கிடைத்ததாக மகிழ்ச்சியில் இருந்த ஊழியர்கள் இதனை கேட்டு மிகவும் அதிர்ச்சியினை அடைந்தனர்.

தொகையை வெளியிடவில்லை

ஊழியர்கள் மத்தியில் இவ்வாறு போனஸ் தருவது மிகவும் சந்தோசமாக இருந்தது. ஏன் என்றால் கொரோனாவிற்கு பிறகு கிடைத்த முதல் சந்தோசம் இதுவாகும். அந்த சந்தோஷமும் அவர்களுக்கு நீடிக்கவில்லை என வருத்தம் அடைந்துள்ளனர். நிறுவனம் எவ்வளவு கொடுத்தோம் என்பதையும், திரும்ப எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதையும் வெளியிடவில்லை.

ஹோண்டாவின் வளர்ச்சி பாதை

நடந்து முடிந்த ஆண்டில் ஹோண்டா மோட்டார்ஸின் வருவாய் சற்று சரிந்தே காணப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில் அவர்கள் இந்தியாவில் எஸ்யூவி பிரிவில் நுழைய உள்ளதாக தெரியவந்துள்ளது. மீண்டும் ஹோண்டா வளர்ச்சி பாதையை தொடும் என உறுதி எடுத்துள்ளது.

தேவைகள்

எந்த நிறுவனமாக இருந்தாலும் போனஸ் தந்தவுடன் அதை பெறுவது ஒரு அற்புதமான உணர்வாக தான் உள்ளது. அந்த உணர்வினை ஊழியர்களால் வார்த்தையால் விவரிக்க முடியாது எனலாம். ஊழியர்களின் சிறிய தேவைகளை பூர்த்தி செய்ய இது மிகவும் உதவியாக தான் இருக்கும். சில தரப்பில் போனஸ் கொடுத்ததே ஹேப்பி தான் என கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here