Sivapooja! : வீட்டில் சிவபூஜை செய்யும் முறை!

0
61

சிவ பூஜைக்கு வேண்டிய முக்கிய குறிப்பு

சிவபூஜை செய்வதற்கு உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப சிவலிங்கத்தை வைத்திருக்க வேண்டும். பூஜை செய்யும் போது சுத்தமாக இருக்க வேண்டும். மாமிசம் போன்ற வகைகள் சாப்பிட கூடாது. வலம்புரி சங்கின் மூலம் அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பானதாக இருக்கும். ஒவ்வொரு அபிஷேகத்திற்கு பிறகும் தீபாராதனை காட்ட வேண்டும். தீபாராதனை காட்டும்போதும் மந்திரத்தை கூற வேண்டும்.

பூஜைக்கு தேவையான பொருள்கள்

சிவலிங்கம், தண்ணீர், பூக்கள், மஞ்சள், குங்குமம், விபூதி, பால், தேன், இளநீர், தீபாராதனை தட்டு, கற்பூரம் போன்ற பொருள்களை வாங்கி வைத்து கொள்ள வேண்டும்.

கூற வேண்டிய மந்திரம்

“ஓம் நமச்சிவாய” என்னும் சிவமந்திரத்தை கூறிக்கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். திருமணம் ஆனவர்கள் “ஓம் நமச்சிவாய” என்றும், திருமணம் ஆகாதவர்கள் “சிவாய நம:” என்றும் கூறலாம்.

பூஜை செய்யும் முறை

  • முதலில் குலதெய்வத்தை வணங்க வேண்டும்.
  • ஐம்பொன் தகடு ஒன்றை சிவலிங்கத்தின் கீழே வைக்க வேண்டும்.
  • முதலில் நீரால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
  • ஒவ்வொரு அபிஷேகம் செய்து முடித்தபிறகு பூ ஒன்றை எடுத்து சிவபெருமானுக்கு வைத்து கொள்ளலாம்.
  • பின் சிவபெருமானுக்கு திருநீறு அணிவிக்கலாம்.
  • தீபாராதனை முடிந்தவுடன் நீரால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
  • பின் பாலினால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
  • பின் பூ, திருநீறு போன்றவை வைக்க வேண்டும்.
  • மறுபடியும் சிவபெருமானுக்கு தீபாராதனை காட்ட வேண்டும்.
  • அதன் பின் நீரால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
  • நீரால் அபிஷேகம் செய்து முடித்தபிறகு மஞ்சளால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
  • பின் பூக்கள், குங்குமம் வைத்து தீபாராதனை காட்ட வேண்டும்.
  • பின்னர் தண்ணீர் வைத்து லிங்கத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
  • அடுத்ததாக குங்குமத்தை வைத்து அபிஷேகம் செய்து தீபாராதனை செய்ய வேண்டும்.
  • சிவனுக்கு இளநீர், பன்னீர், தேன் போன்ற பல பொருள்களால் அபிஷேகம் செய்யலாம்.

விபூதி அபிஷேகம்

சிவபெருமானுக்கு விபூதியால் அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பாகும். சகல பாவங்களையும் எடுக்கும் சக்தி இதற்கு உள்ளது. இந்த சாம்பல் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்ததாகும். சிவபெருமானுக்கு அடுத்ததாக விபூதி அபிஷேகம் செய்து தீபாராதனை காட்ட வேண்டும். அபிஷேகம் செய்த விபூதியை எடுத்து வைத்து கொள்ளலாம். சிவலிங்கத்துக்கு பட்டு துணியினை கட்டி விட வேண்டும். சிவபெருமானுக்கு பிரசாதம் படைக்க வேண்டும்.

அருள்

இந்த முறைகளின் மூலம் அபிஷேகம் செய்யும் போது உங்கள் வீட்டில் தேவையான மங்களங்கள் கிடைக்கும். இவ்வாறு செய்து வருவதன் மூலம் முக்தி கிடைக்கும். வீட்டில் இறைவனுக்கு என்று நேரத்தை கட்டாயம் செலவிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் இறைவன் உங்களுக்கு அருளினை வழங்குவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here