ஹைதராபாத் அணி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 2016 ஆம் ஆண்டு கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்த வீரர்கள் டேவிட் வார்னர், ரஷீத் கான் ஆகியோர் ஆவர். தற்போது இந்த இருவருமே அணியில் இல்லை. வார்னர் டெல்லி அணியிலும், ரஷீத் குஜராத் அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.

வார்னர்
சன்ரைசர்ஸ் அணிக்காக மட்டும் 4000 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர் வார்னர் ஆவார். கடந்த சீசன்களாக வார்னர், ரஷீத் காணும் காண்பித்த கன்சிஸ்டென்ஸி காரணமாக மட்டுமே அந்த அணியானது சிறந்த நிலையில் இருந்தது.

ஏலம்
நடந்த மெகா ஏலத்தில் மிக தெளிவாக வீரர்களை வாங்கியது சன்ரைசர்ஸ்தான். வில்லியம்சன், அப்துல் சமத், உம்ரான் மாலிக் ஆகியோரை மட்டும் தக்கவைத்துக்கொண்டு இந்த ஏலத்தில் பங்கேற்றது.

வீரர்கள்
நிக்கோலஸ் பூரன் என்பவரை ரூபாய் 10.75 கோடிக்கு அணியானது வாங்கியது. ரோமாரியோ ஷெப்பர்ட் என்பவரை ரூபாய் 7.75 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. புவனேஷ்வர் குமார், டி நடராஜன் போன்ற வீரர்களையும் மீண்டும் அணி வாங்கியது. இளம்வீரர்களான ராகுல் திரிபாதி, வாஷிங்டன் சுந்தர், அபிஷேக் ஷர்மா ஆகியோரையும் வாங்கியது.

வேகப்பந்து வீச்சு
அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளராக 118 விக்கெட்களை வீழ்த்தியுள்ள ஸ்விங் +பாஸ்ட் புகழ் புவனேஷ்வர் வழக்கம் போல இந்த ஆண்டும் தலைமை தாங்க உள்ளார். அவருடன் தமிழக மைந்தன் நடராஜன், உம்ரான் மாலிக், கார்த்திக் தியாகி, மார்கோ ஜான்சன், சீன் அபோட், ஷெப்பர்ட் ஆகிய வீரர்களும் அசுர பலத்துடன் உள்ளனர்.
பேட்டிங் லைன் அப்
இந்தியாவுக்கு எதிரான தொடரில் மூன்று அரை சதங்களை எடுத்தவர் ஆவார். இதேபோல் கடந்த சீசனில் 400 ரன்கள் எடுத்த திரிபாரி, எய்டன் மாக்ரம், கேன் வில்லியம்சன் என சன்ரைசர்ஸ் பேட்டிங் லைன் அப் வலுவாகிறது.

எதிர்பார்ப்பு
டேல் ஸ்டெயின், டாம் மூடி, விவிஎஸ் லக்ஸ்மன், பிரையன் லாரா, முத்தையா முரளிதரன் என மிஸ்டர் கூல் பயிற்சியாளர்கள் இரண்டாம் முறை ஐபிஎல் கோப்பையை தட்டிதூக்குமா என பெரிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.