Monday, May 23, 2022
HomeIndiaIndia-Russia! : மகிழ்ச்சியால் நிரம்பும் இந்தியா! தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்கள்!

India-Russia! : மகிழ்ச்சியால் நிரம்பும் இந்தியா! தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்கள்!

போர்

ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக கச்சா எண்ணெய் தேவையும், அதன் விநியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. ரஷ்யா தனது எண்ணெய் வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்தியா உட்பட பல நாடுகளுக்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

தள்ளுபடி

இந்தியா -ரஷ்யா மத்தியிலான கச்சா எண்ணெய் வர்த்தகத்தை மேம்படுத்த ஒப்புக்கொண்ட நிலையில் ரஷ்யா கச்சா எண்ணெய்க்கு சுமார் 35 டாலர் தள்ளுபடி விலையில் அளிப்பதாக அறிவித்துள்ளது.

பேச்சுவார்த்தை

ரஷ்யா இந்தியாவிற்கு சுமார் 15 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை இரு நாட்டு அரசுகள் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

தகவல்

ரஷ்யா இந்தியாவிற்கு பிரென்ட் கச்சா எண்ணெய் விலையை வைத்து தள்ளுபடி அளிப்பதாக தெரிவித்துள்ளது. தற்போது 35 டாலர் வரையில் தள்ளுபடி அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆலோசனை

இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்க்கு ரூபாய் வாயிலாகவும் பேமெண்ட் செலுத்த அனுமதி அளித்துள்ளது. இந்தியா யூரோ வாயிலாக பேமெண்ட் செய்ய முடிவு செய்துள்ளது. இதனை குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கனவே வாங்கியுள்ள ரஷ்ய எண்ணெய் ஜூன் மாதம் முதல் வர உள்ளன. அதிகப்படியான ரஷ்யா எண்ணெய் தள்ளுபடியில் இந்தியாவுக்கு வரும். இதனால் பெட்ரோல், டீசல் விலை பெரிய அளவில் குறைய வாய்ப்புகள் உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments