India vs Australia: வெற்றியை தட்டி தூக்கிய இந்தியா!

0
33

ஆஸ்திரேலிய அணி

இந்தியாவிற்கு வந்துள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலிய அணியானது முதல் டி20 போட்டியில் வெற்றியினை பெற்றது. இந்த வெற்றியின் காரணமாக ஆஸ்திரேலியா அணி முன்னிலை வகித்தது.

போட்டி

முக்கியமான இரண்டாவது போட்டியானது நாக்பூரில் நடைபெற்றது. மழையால் இந்த போட்டி தாமதமாக தொடங்கப்பட்டது. இதன் காரணமாக ஒவ்வொரு அணிக்கும் மொத்தமாக 8 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டு போட்டி ஆரம்பிக்கப்பட்டது.

வீழ்ச்சி

இந்தியா டாஸ் வென்று முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. ஆரம்பத்திலிருந்தே ஆஸ்திரேலியா அணி அக்சரின் சூழலில் வீழ்ச்சியடைந்தது. இருப்பினும் ஆஸ்திரேலியா அணி அதிரடியாக விளையாடி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 90 ரன்களை குவித்தது.

இந்திய அணி

இந்திய அணிக்கு ரோஹித் சர்மா சிறப்பான துவக்கத்தை அமைத்தார். அவரது திறமையால் பல சிக்ஸர்களை எடுத்துள்ளார். ராகுல், கோலி அவுட் ஆகா, சூரியகுமார் யாதவ் போன்றோர் முதல் பந்திலேயே அவுட் ஆகி அதிர்ச்சியினை அளித்தனர். கடைசியாக 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தினேஷ் கார்த்திக் சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்து வெற்றியை குவித்துள்ளார்.

கடைசி டி20

இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியினை பெற்று தொடரை சமன் செய்துள்ளது. வருகிற 25 ஆம் தேதி மூன்றாவது, கடைசி டி20 போட்டியானது நடைபெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here