S-400 Missile system! : எஸ்-400 ஏவுகணை அமைப்பை இந்தியா பயன்படுத்துவதாக தகவல்! நடுநிலையை கடைபிடிக்கும் இந்தியா!

0
76

பொருளாதார தடை

ரஷ்யாவிடம் இருந்து சுமார் 50 ஆயிரம் கோடி செலவில் எஸ்-400 ஏவுகணைகளை வாங்குவதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்காக இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை செய்து வருகிறது.

உளவுத்துறை இயக்குனர் கூற்று

ரஷ்யாவின் நவீன இடைமறி ஏவுகணை அமைப்பான எஸ்-400ஐ இந்தியா அடுத்த மாதம் ராணுவ பயன்பாட்டில் ஈடுபடுத்தும் என அமெரிக்காவின் உளவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்த நவீன ஏவுகணை அமைப்பை இந்தியா நிறுவுவதாக அவர் தெரிவித்தார்.

இந்தியா

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளை நிலம், வானில் இருந்து கடந்த ஆண்டு இந்தியா செலுத்தி பல்வேறு சோதனைகளை நடத்தி வருகிறது. விண்வெளியில் இந்தியாவின் செயற்கைகோள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது.

ராணுவ தளவாட உற்பத்தி

வான், நிலம், கடல் போன்றவைகளில் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் இந்தியா ராணுவ தளவாட உற்பத்தியை அதிகரித்து வருகிறது. முப்படைகளின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய போரிலும் இந்தியா நடுநிலையை கடைபிடித்து வருவதாக கூறியுள்ளனர்.

அச்சுறுத்தல்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருவதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இந்தியா கருதுகிறது. பாகிஸ்தானுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்ட பிறகும் காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதம் தொடர்கின்றன. இருதரப்பினரும் சுமார் 50 ஆயிரம் பாதுகாப்பு படையினரை எல்லைகளில் குவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here