India economic growth! : மார்ச் மாதம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி!

0
96

வளர்ச்சி

நாட்டின் ஜி.டி.பி என்னும் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த நிதியாண்டில் 8.7 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் காலாண்டில் 4.1 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் அறிவித்துள்ளது.

அலுவலகம் தெரிவித்தவை

நாட்டின் பொருளாதார வளர்ச்சி மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 4.1 சதவீதம் அதிகரித்தது. கடந்த நிதியாண்டின் வளர்ச்சி 8.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டில் மைனஸ் 6.6 சதவீதமாக இருந்தது. சீனாவை பொறுத்தவரை வளர்ச்சி மார்ச் காலாண்டில் 4.8 சதவீதமாக இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எட்டு துறைகள்

நாட்டில் உள்ள முக்கிய 8 துறைகளின் வளர்ச்சி கடந்த ஏப்ரல் மாதத்தில் 8.4 சதவீதமாக உயர்வினை கண்டுள்ளது. இந்த வளர்ச்சி அதற்கு முந்தைய ஆண்டைவிட 62.6 சதவீதம் அதிகமாகும். கடந்த மார்ச் மாதத்தில் துறைகளின் வளர்ச்சி 4.9 சதவீதமாக இருந்தது.

துறைகளின் வளர்ச்சி

நிலக்கரி, கச்சா எண்ணெய், பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருள்கள், இயற்கை எரிவாயு, உரம், சிமென்ட், உருக்கு, மின்சாரம் போன்ற முக்கிய துறைகள் இதில் அடங்கும். கடந்த ஆண்டு ஏப்ரல் வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டு ஏப்ரல் வளர்ச்சி அதிகமாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here