Couples! : திருமண வரவேற்பு நிகழ்ச்சியை இப்படியா நடத்துவது? அனைவரையும் வியக்க வைத்த ஜோடிகள்..!

0
87

திருமணம்

அமெரிக்காவில் சாகச கலைகளில் ஈடுபடும் காதல் ஜோடிகளது திருமணம் நடைபெற்றது. அந்த திருமண விழாவில் அவர்கள் சாகசம் செய்து அனைவரையும் அசத்தியுள்ளனர்.

வியப்பு

சாகச கலைஞர்களான கேப் ஜெசாப் -ஆம்பிர் பாம்பிர் காதல் ஜோடி அவர்களது திருமணத்தை வித்தியாசமாக நடத்த முடிவு செய்து வந்தனர். முதலில் சாதாரணமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கையை பிடித்துக் கொண்டு நடந்து வந்தனர். பின்னர் அவர்களது முதுகு பகுதியில் தாங்களே தீயை பற்ற வைத்து அங்கிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர்.

பயிற்சி பெற்றவர்கள்

இதனை கண்டு அங்கிருந்த அனைவரும் ஆரவாரம் செய்தனர். சிறிது நேரத்தில் பின்னால் நடந்து வந்த இருவர் தீயணைப்பு கருவிகளை வைத்து தீயினை அணைத்தனர். இந்த அதிர்ச்சியளிக்கும் சாகசத்தை செய்த ஜோடி முறையாக பயிற்சி பெற்றவர்கள் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here