Friday, May 20, 2022
HomeCinemaActor Prashant! : நடிகர் பிரஷாந்த் சொன்ன பதிலை கேட்டு கோபமடைந்த ஜெயலலிதா!

Actor Prashant! : நடிகர் பிரஷாந்த் சொன்ன பதிலை கேட்டு கோபமடைந்த ஜெயலலிதா!

பிரசாந்த்

1990களில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் ஆக இருந்தவர் டாப் ஸ்டார் நடிகர் பிரஷாந்த். இயக்குனர் தியாகராஜனின் மகனான இவர் வைகாசி பொறந்தாச்சு என்னும் படம் மூலம் அறிமுகமாகி பின் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

அரசியல்

அவரது தந்தை மூலம் அரசியல் ஆளுமைகளான கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருடன் நெருங்கி பழகும் வாய்ப்பை பெற்றார். ஒரு காலத்தில் சிறந்த நடிகராக இருந்த அவர் மீது ஜெயலலிதா அவர்களுக்கு சிறிய கோபம் ஏற்பட்டுள்ளது.

பேட்டி

ஒருமுறை பிரஷாந்த் அவரது பிறந்தநாளில் ஜெயலலிதாவை சந்திக்க சென்றுள்ளார். அப்போது ஜெயலலிதா உனக்கு அரசியலில் ஆர்வம் உள்ளதா? என கேட்டுள்ளார். அரசியலில் எப்பொழுதும் நாட்டம் இருந்ததில்லை என முகத்தில் அடித்தமாரி கூறியுள்ளார். இது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியது என தியாகராஜன் பேட்டியில் கூறியுள்ளார்.

நடிப்பு

கலைஞருடன் நெருங்கி பழகிய பிரஷாந்த் அவர் உருவாக்கிய பொன்னர் ஷங்கர் என்னும் படத்தில் நடித்தார். வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருந்த போது தனிப்பட்ட பிரச்சனைகளால் சினிமாவில் இருந்து கொஞ்ச காலம் ஒதுங்கி இருந்தார்.

மம்பட்டியான்

நீண்ட இடைவேளைக்கு பிறகு தியாகராஜன் நடித்த மம்பட்டியான் திரைப்படத்தின் ரீமேக் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார் பிரஷாந்த். ஒரு சில படங்களில் நடித்தாலும் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. உடல் எடை அவருக்கு கூடி உள்ளதாகவும் குறைகள் கூறப்பட்டது.

அந்தகன்

தற்போது அது எல்லாவற்றையும் சரி செய்து அந்தகன் என்னும் படத்தில் நடித்து வருகிறார். நடிகர் பிரஷாந்த் பழைய நிலைக்கு திரும்புவாரா என ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments