Kamal Haasan! : கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் சிறப்பு பேச்சு! பணத்தை அரசியலில் போட விரும்புவதாக தகவல்!

0
215

விக்ரம் திரைப்படம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

பத்திரிகையாளர் சந்திப்பு

நடிகர் கமல்ஹாசன் நேற்றைய தினம் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசியுள்ளார். அதில், நான் சம்பாதித்த பணத்தையெல்லாம் திரும்ப சினிமாவில் தான் போடுவேன் என கூறியபோது கையை தட்டினார்கள் என கூறினார். ஆனால் தற்போது சம்பாதித்ததை சினிமாவையும் தாண்டி அரசியலிலும் போட விரும்புவதாக கூறினார்.

எதிர்பார்ப்பு

விக்ரம் திரைப்படம் ஆனது வித்தியாசமான திரைப்படமாக இருக்கும் என தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளதாக கூறப்படுவதால், படத்தின் மீது சிறந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here