திரைப்படம்
கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மாறி மாறி பிஸியாக நடித்து வருகிறார். இவர் தமிழில் உதயநிதி ஸ்டாலினுடன் ஜோடியாக நடிக்கும் மாமன்னன் திரைப்படம் விரைவில் ஆரம்பிக்க உள்ளது.

ஆசை
இவர் செல்வராகவனுடன் இணைந்து நடித்த சாணி காகிதம் என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் நடிகர் விஜய்யுடன் மீண்டும் ஜோடி போட்டு நடிக்க ஆசைப்பட்டு வருகிறார்.

பொறாமை
விஜய்க்கு ஜோடியாக பைரவா, சர்க்கார் போன்ற திரைப்படங்களில் இதற்கு முன்னர் நடித்திருந்தார். மாஸ் ஹீரோவான விஜய்யுடன் அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஜோடி சேர்ந்தது சக நடிகைகளை பொறாமை பட வைத்தது.

நடிகைகள்
கீர்த்தி சுரேஷ் மீண்டும் விஜய்க்கு ஜோடியாக நடிக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறார். சினிமாவில் இருக்கும் நடிகைகள் அனைவரும் விஜய்யுடன் ஒரு படத்திலாவது இணைந்து நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு வருகிறார்கள்.

விஜய் நடிக்கும் படம்
பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக நடிக்கும் இருமொழி திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிப்பார் என சொல்லப்பட்டது. இப்போது பாலிவுட் ஹீரோயின் அந்த படத்தில் நடிக்க உள்ளார் . சோர்ந்து போகாத கீர்த்தி சுரேஷ் அடுத்த படவாய்ப்பை பிடிக்க முயற்சி செய்து வருகிறார்.