ஏன் டா ராஜ்? என்று கேட்ட உடனே அவனது முகம் எரிந்தது முகம் மாறியது.
ராஜிவை அடிக்கும் மார்ட்டின்
இவ்வளவு நாட்களாக ராஜியிடம் இருந்து அடிவாங்கிய மார்ட்டின் இப்போது ராஜிவை அடித்திருக்கிறான். அதனால் தான் பின் ராஜியின் வலது முகம் எரிந்துள்ளது.
பின் மார்ட்டின் ராஜியின் மார்பில், தோளில் மற்றும் கைகளில் என பல இடங்களில் அடி விழுந்தது. ராஜிவுக்கு சமாளிக்க டைம் கொடுக்க வில்லை மார்ட்டின்.

ராஜிவை குத்துசண்டை வீரன் போல் திரும்ப திரும்ப மார்ட்டின் அடித்தான்.
ராஜிவை மார்ட்டின் அடிப்பதை பார்த்து ஜெனிபர் திகைத்து போனாள்.
ஜெனிபர்: மார்ட்டின், மார்ட்டின், ப்ளீஸ்! அடிக்காதீங்க.
(மார்ட்டின் ஜெனிபர்க்காக அடிப்பதை நிறுத்தி விட்டார்)
ஜெனிபர்: “அவனை மாதிரியே நீங்களும் பண்ணாதீங்க! மார்ட்டின். உங்கள அவன் இதுவரைக்கும் அடிச்சது அது அவனோட குணம். நீங்களும் அவனை போல பண்ணாதீங்க.
மார்ட்டின்: “நான் ராஜிவை இப்போ அடிக்கிறது. உன்னை வேண்டாம்இன்னு சொல்லி கஷ்டப்படுத்தின ராஜ் இவன் தானே?

(தள்ளாடி கொண்டிருந்த ராஜிவை பார்த்து விட்டு )
ஜெனிபர்: ஆமா! இவன் தான்.
மார்ட்டின்: அவன் உன்னை வேண்டாம் இன்னு சொன்ன காரணத்துக்காக தான் அவனை அடிச்சேன். உன்னை நிம்மதி இல்லாம செய்தவன் இவன் தானே? உன்னை ரொம்பவே கஷ்ட படுத்திட்டான்.
(வாயடைத்து போன ஜெனிபர். மார்ட்டின் அவளுக்காக இது எல்லாம் பண்றான் என ஆச்சிரியத்தில் நிர்கிறாள்)
ராஜிவை மார்ட்டின் பிடித்திருந்த கையை நிக்க ஜெனிபர் முயற்சி செய்கிறாள். அதனை தெரிந்து கொண்ட மார்ட்டின் ராஜிவின் மீது இருந்த கையை மார்ட்டின் எடுக்குறான்.
( ஜெனிபரின் கையை விடாமல் பிடித்திருந்தான் மார்ட்டின் )

ஜெனிபர் : நீ போ! ராஜ் ..
ராஜ்: ஜெனி இவன் யார்?
(தடுமாறி கொண்டே கேட்ட ராஜ் )
ஜெனிபர்: மார்ட்டின் என்னுடைய காதலன்.
( மார்டினை பொறாமையோடு பார்த்தான் ராஜ். மார்ட்டின் ஜெனிபரின் அருகே சென்றான்)
மார்ட்டின்: ஜெனி! ( கையினால் தடுத்தாள் மார்டினை ஜெனி)
ஜெனிபர் : ராஜ்! இதுக்கு மேல என் பக்கம் வராம இருக்கது நல்லது. இன்னொரு வாட்டி எங்கிட்ட வம்பு பண்ணா! போலீஸ்ல கேஸ் போடுவேன்.

ராஜ்: மிரட்டுறீயா..? ஜெனி..! (மீண்டும் ராஜிவை அடிக்க கை ஓங்கினான் மார்ட்டின்)
ஜெனிபர்: மார்ட்டின் ! போதும் நிறுத்துங்க..! ராஜ் எனக்கு எல்லாமே மார்ட்டின் தான். இங்க இருந்து மரியாதையா? போய்ட்டு! அவன் ஒவேறொரு தடவையும் அடிக்கும்போது என்னால தடுக்க முடியாது.
(கோபத்துடன் அங்கிருந்து சென்றான் ராஜ். மார்ட்டின் பக்கம் போனாள் ஜெனிபர் )
ஜெனிபர்: எதுவா? இருந்தாலும் நான் உங்கிட்ட கேட்டிருக்கனும். சாரி மார்ட்டின்! மன்னிச்சுக்கோ!
மார்ட்டின்: நீ..! சாரி! எல்லாம் கேட்ட்க வேண்டாம். நீ..! என் காதலை ஏத்துகிட்டது ரொம்ப பெரிய விஷயம்.
ஜெனிபர்: மார்ட்டின்..! “ஐ லவ் யூ”…….
( மார்டினை கட்டி அணைத்து உதட்டில் முத்தமிட்டாள்)
அவளை இறுக்கி அணைத்து அவளின் இதழ்களை சிறைபிடித்தான்.