ஆர்.கோவிந்த், துாத்துக்குடி மாவட்டத்திலிருந்து அனுப்பிய கடிதம் அரசியல்வாதிகள் எல்லாரும் புளுகு மூட்டை தான் என அனைவரும் அறிவோம்.
அரசியல்வாதி
அனைத்து புளுகு மூட்டை அரசியல்வாதிகளையும், ராகுல் ஒரே ஒரு சிக்ஸர் அடித்து விட்டார் . பொய்யான வாக்குறுதிகளை கூறி என்னால் அரசியல் பண்ண முடியாது. இந்த தேசத்தை காங்கிரஸ் காப்பாற்ற முடியும் என கூறுகிறார்.
காந்தி
மகாத்மா காந்தி மட்டும் உயிரோடு இருந்தால் கோட்சேவின் கைகளில் இருந்த துப்பாக்கியால் தானே சுட்டு தற்கொலை செய்திருப்பார். பணம் அச்சிடும் இயந்திரம் பாகிஸ்தானுக்கு விற்றதும் மகாத்மா காந்தி தானோ.
சீனா
ஆட்சிப் பொறுப்பில் இல்லாத போதே சீனாவுடன் ஒப்பந்தங்கள் மேற்கொண்டது காந்தியை தழுவித் தானோ? இது போன்று நுாற்றுக்கணக்கான விஷயங்கள் சோனியாவும் அவர் மகனும் செய்துள்ளனர்.
ராகுல்
ராகுலுக்கு பொய் சொல்லுவதே தைரியதாம். அவர் பொய்யான வாக்குறுதிகளை கூறி அரசியல் செய்ய மாட்டாராம் என கூறுகிறார். அறுபது ஆண்டுகளாக காங்கிரஸ் இந்த தேசத்தை காப்பாற்றியது போதும். கொஞ்சம் ஒதுங்கி இருங்கள் நாடு மூச்சு விடட்டும்!.