பிரபலங்களின் நிச்சயதார்த்தம், திருமணம், சீமந்தம், பிறந்தநாள் என எந்த விசேஷம் நடந்தாலும் அதை சோசியல் மீடியாவில் ஜெட் வேகத்தில் வைரல் ஆக்கி விடுகிறார்கள்.
திருமணம்
சின்னத்திரை உள்ள பிரபலங்களுக்கு திருமணம் நடந்து வருகிறது. கொரோனா தொடங்கிய காலத்தில் இருந்து பலர் யாருக்கும் தெரியாமல் தங்கள் குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து வருகிறார்கள்.
புகைப்படங்கள்
திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள். சின்னத்திரை ரீல் ஜோடிகள் ரியல் ஜோடியாக மாறி உள்ளனர்.திருமண சீரியல் சித்து – ஸ்ரேயாவின் திருமணம் நல்லப்படியாக நடந்தது. இதற்கு பலர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர் .
தீபக்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் என்றென்றும் புன்னகை என்ற சீரியலின் மூலம் பிரபலமானவர் தீபக் . இவர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக காதலித்து வந்தார்கள்.
நிச்சயதார்த்தம்
அபி நவ்யா மற்றும் தீபக் நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்தது. நிச்சயதார்த்தம் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெருவித்தனர்.
திருமணம்
இவர்களுக்கு வருகிற 27 ஆம் தேதி சென்னையில் இருக்கும் திருமண ஹாலில் நடைபெற இருக்கிறது.வீடியோக்களை அபி நவ்யா மற்றும் தீபக் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்கள். இதை பார்த்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளன.