பணக்காரர் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆவதற்கும், ஏழை மீண்டும் மீண்டும் ஏழையாகவே இருப்பதற்கும் ஒரு காரணம் தான். பணம் இல்லாதவர் பணம் இல்லை என வரக்கூடிய பணத்தை சேமித்து வைக்க முடியாமல் இழந்து விடுகின்றான்.
மகாலட்சுமி
உங்கள் கையில் 10 ரூபாய் இருந்தால் அதை கோடி ரூபாய் என நினைத்து, அந்தப் பணத்தை பல மடங்காக எப்படி பெருக்குவது என்று சிந்தியுங்கள். இல்லை என்பதை நினைக்காதீர்கள். பர்ஸில் எந்த இரண்டு பொருட்களை வைத்தால் மகாலட்சுமி வருவார் . கோமதி சக்கரம் மற்றும் வில்வ இலை என இந்த 2 பொருட்களை வாங்கி உங்களுடனே வைத்து கொள்ளுங்கள்.
கோமதி சக்கரம்
கோமதி சக்கரத்தை முதலில் பூஜை அறையில் வைத்து கொண்டு பின் அதை வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை நினைத்து கோமதி சக்கரத்திற்கு பாலபிஷேகம் செய்து பின் நல்ல தண்ணீரில் கழுவி பூஜை அரையில் வைத்த பின் தீப ஆராதனை காட்டி பின் கோமதி சக்கரத்தை பர்ஸில் வைக்க வேண்டும்.
வில்வ இலை
பின் வில்வ இலை . வில்வ இலையை வாங்கி சிவன் கோவிலில் அர்ச்சனை செய்து பின் சிவன் பாதங்களில் இருந்து வில்வ இலையை வாங்கி பர்ஸில் வைக்க வேண்டும் . இப்படி இரண்டு பொருளையும் பர்ஸில் வைக்கும் போது பணம் வருவது அதிகரிக்கும் . பணம் இல்லை என கஷ்டப்படும் நபர் நம்பிக்கையுடன் இதை வாங்கி பர்ஸில் வைத்து கொள்ளுங்கள்.
பர்ஸில்
பிறகு உங்கள் பர்ஸில் தேவை இல்லாத பொருட்களை வைக்கும் பழக்கத்தை நிறுத்திக்கொள்ளுங்கள் பர்ஸ் லேசாகத் தான் இருக்கவேண்டும்.இதில் சொன்ன சின்ன விஷயங்களை பின்பற்றினால் போதும் வருமானத்தில் நிச்சயமாக வித்தியாசம் தெரியும் .