அறிவிப்பு
அரபிக்கடலில் இந்திய -ரஷிய கடற்படையினர் வெள்ளிக்கிழமை கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டதாக இந்திய கடற்படை அறிவித்துள்ளது.
பயிற்சி
இதில் ஈடுபடும் இந்தநாட்டு கடற்படைகளும் இயற்கை பேரிடர் சூழ்நிலைகளில் சுமூகமான ஒத்துழைப்பும், தகவல்தொடர்பும் ஏற்படுத்தி கொள்ளும் வகையில் கூட்டுப்பயிற்சி ஏற்பாடு செய்யப்படுகின்றன.

கப்பல்
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் கொச்சி போர்க்கப்பல், ரஷ்யாவின் போர்க்கப்பலும் இந்த பயிற்சியில் ஈடுபட்டன.
செய்தி
கடல்சார் நடவடிக்கைகள், ஹெலிகாப்டர் தரையிறக்குவதற்கான செயல்பாடுகள், கடற்படைக்கு இடையிலான ஒருங்கிணைப்பு போன்றவற்றை பறைசாற்றியதாக கடற்படை தரப்பில் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.