Latest Tamil News 2022; இளைஞரை கன்னத்தில் அறைந்த பெண் போலீஸ் ; கடும் கண்டனம் …..

0
81
விசாரணை

பெண் போலீஸ் இளைஞரை கன்னத்தில் அறைந்து விட்டு செல்லும் ஆறு விநாடி வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது.

பெண் போலீஸ்

பேன்ட்டை சுத்தம் செய்யச் சொல்லி இளைஞரின் கன்னத்தில் அறைந்த பெண் போலீசின் வீடியோ வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த சம்பவத்துக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

அடக்குமுறை

மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் காவல் துறையினர் சில அடக்குமுறைகாவலர்களும் இருக்கிறார்கள் அதற்கு இந்த வீடியோ ஒரு உதாரணமாகும். சமூகவலைதளத்தில் அத்துமீறல்களும் பதிவாகி, பார்வைக்கும் வந்துவிடுகின்றன. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பெண் காவலர் தன் மீது சேறு தெறிக்கக் காரணமாக இருந்த இளைஞரை அழைத்து தன் பேண்டை சுத்தம் செய்ய வைத்தது வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசத்தில் உள்ள ரேவா மாவட்டத்தில் உள்ள சிர்மோர் சவுக் பகுதியில் இது நடந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இளைஞர் தனது பைக்கை எடுக்க முயற்சித்து இருக்கிறார். பைக்கில் உள்ள சக்கரங்கள் சுழன்று சாலையில் இருந்த சகதி பெண் காவலர் மீது பட்டிருக்கிறது. கோவமடைந்த பெண் காவலர், பேண்டை சுத்தம் செய்யுமாறு பணித்திருக்கிறார்.

கடும் கண்டனங்கள்

பெண் காவலர் கோபம் தீராமல் இளைஞரின் கன்னத்தில் அறைந்துவிட்டுச் சென்றது பதிவாகியிருக்கிறது. இது வைரலானதைத் தொடர்ந்து பெண் காவலருக்குச் சமூகவலைதளங்களில் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன.

விசாரணை

“இதுதொடர்பாக புகார் அளித்தால் விசாரணை நடத்துவோம்” என்று ரேவா காவல் துறைக் கண்காணிப்பாளர் கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here