கைதிகள்
கோவை மத்திய சிறையில் விசாரணை, தண்டனை கைதிகள் என்று 1,700 க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். பெண்கள் சிறையில் 40 பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தடை
தண்டனை கைதிகளை செவ்வாய், வியாழன், விசாரணை கைதிகளை திங்கள், புதன், வெள்ளி கிழமைகளிலும் உறவினர்கள் சந்தித்து பேசலாம். 2020ம் ஆண்டு கொரோனா காரணமாக சிறை கைதிகளை சந்தித்து பேச தடை விதிக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை
வாட்ஸப் வீடியோ கால் அழைப்பு மூலம் உறவினர்களுடன் பேச நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய அரசு சில மாதங்களுக்கு முன் இ-பிரிசன்ஸ் சாப்ட்வெர் அறிமுகப்படுத்தியது.
முன்பதிவு
இதன்மூலம் முன்பதிவு செய்து ஆன்லைன் வழியாக உறவினர்கள், கைதிகளுடன் பேச வழிவகுக்கிறது. தினசரி 30 கைதிகள் வரை இதன் மூலம் உறவினர்களுடன் பேசி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.