Monday, May 23, 2022
HomeTamil NewsLatest Tamil News 2022: கைய புடிச்சி இழுத்தியா ? கழுத்தில கைய போட்டியா..?...

Latest Tamil News 2022: கைய புடிச்சி இழுத்தியா ? கழுத்தில கைய போட்டியா..? ஆட்டத்தால் நின்ற திருமணம்..!

கடலூர் மாவட்டம் கண்ட்ருட்டி அருகே பெரியக்காட்டு பாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவருக்கும் குடுமியான் குப்பத்தை சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவருக்கும் படம்புளியூரில் உள்ள திருமண பண்டபத்தில் 19 ம் தேதி இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

டிஜே பார்ட்டி

மாப்பிள்ளையின் விருப்பத்திற்கு மாறாக வரவேற்பில் பெண் வீட்டார் டிஜே இசை நிகழ்ச்சி கட்டாயம் வைத்தே ஆக வேண்டும் என்று அடம்பிடித்து வைத்ததாக கூறபடுகிறது. டிஜே இசைக்க குத்து பாடல்களால் உற்சாகம் அடைந்த பெண் வீட்டார் எழுந்து ஆடா ஆரம்பித்தன. பெண்ணின் உறவுக்கார இளைஞர்கள் பெண்ணின் கையை பிடித்து சினிமா பாணியில் குழு நடனம் ஆடா தொடங்கின. ஏற்கணமே வெறுப்பாக இருந்த மாப்பிளை ஸ்ரீதர் வேண்டாம் வெறுப்பாக ஆடும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

ஒஸ்தி

அப்போது ஒஸ்தி படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்றை டிஜே இசைக்க மற்ற ஒரு உறவினர் இன்னும் ஒருபடி மேலே சென்று மண பெண்ணின் கையை பிடித்து இழுத்து ஆட தொடங்கினர். மணமகன் மற்றும் மணமகள் இருவர் மேலையும் கையை போட்டு கொண்டு நடனம் ஆடியதால் கடும் ஆத்திரம் அடைந்த மாப்பிளை அவரை பிடித்து விலக்கி விட்டதால் பரபரப்பு. மணமகனின் கோவத்தை கண்டு பயந்த மணப்பெண் அங்கிருந்து விலகி ஓரமாக நின்றார். இத்தனை கலவரங்களுக்கு நடுவே சிலர் உற்சாகமாக ஆடி கொண்டிருந்தனர்.

மணப்பெண்

இந்நிலையில் மணமகன் தன்னை தாக்கி விட்டதாக கூறி திருமணத்தை நிறுத்திய மணமகள். இதற்கெல்லாம் சந்தேகம் கொள்ளும் ஸ்ரீதரை திருமணம் செய்து கொண்டால் தன்னால் நிம்மதியாக வாழ முடியாது. என்று கூறி உறவினருடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றதால் 20 ம் தேதி காலையில் நடக்கவிருந்த ஸ்ரீதரின் திருமணம் பாதியிலேயே நின்று போனது. பெண் வீட்டார் சேர்ந்து பேசி உறவுக்கார பையனை திருமணம் செய்து வைத்தனர் .

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments