இன்று ஏராளமான மக்கள் நீரிழிவு நோயால் கஷ்டப்பட்டு வருகின்றனர். கணையத்தில் இரண்டு செல்கள் காணப்படுகின்றனர்.
குளுக்கோஸ்
இன்சுலின் ரத்தத்தின் குளுக்கோஸ் அளவினை கட்டுப்படுத்தி சரியான வைத்திருக்கும். இன்சுலின் குறைந்து போனால் ரத்த குளுக்கோஸ் அளவு கூடும். இதை தான் நீரிழிவு, சுகர் மற்றும் சர்க்கரை வியாதி, டயாபடீஸ் என பல பெயர்களில் அழைக்கிறோம்.
கணையம்
இந்தக் கணையம் ஒழுங்காக இயங்க நமது உணவில் ஒழுக்கமும், வாழ்வில் ஒழுக்கமும் வேண்டும். இதை எளிய முத்திரை மூலம் சிறப்பாக இயங்க வைக்கலாம். நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த முத்திரைகளை படியுங்கள் . தொடர்ந்து இந்த முத்திரையை செய்தால் சுகர் வராமல் நிம்மதியாக வாழலாம்.
வருண முத்திரை:
பாயில் நிமிர்ந்து அமர வேண்டும். பின்பு கண்களை திறந்து சுண்டுவிரல் மற்றும் பெருவிரல் நுனிகளை தொடவும். காலை , மதியம் மற்றும் மாலை சாப்பிடுவதற்கு முன் பயிற்சி செய்ய வேண்டும்.
சுமண முத்திரை
பாயில் நிமிந்து இருக்க வேண்டும் . கண்களை நன்றாக மூடி மூச்சை பத்து வினாடிகள் இழுத்து விடவும். பின்பு இரண்டு கை விரல்களையும் திருப்பி படத்தில் உள்ளதை போல் சுண்டுவிரல், மோதிரவிரல் மற்றும் நடுவிரல், ஆள்காட்டிவிரல் ஆகிய விரல்களின் நகங்களை தொடவேண்டும் .
உணவு
நன்றாக பசிக்கும் போது நன்கு மென்று சாப்பிட வேண்டும் . முருங்கை கீரையை வாரத்தில் ஒரு நாள் கண்டிப்பாக சாப்பிடவேண்டும். கொய்யாப்பழத்தை சிறு துண்டுகளாக்கி தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். காபி மற்றும் டீ குடிப்பதை நிறுத்தி சுக்குமல்லி பால் சேர்க்காமல்குடிக்க வேண்டும் .