செய்யும் முறை
முதுகெலும்பு நேராக இருக்கும் படி விரிப்பில் நிமிர்ந்து அமர வேண்டும். இரு கை விரல்களையும் திருப்பி நகங்கள் ஒன்றையொன்று தொடும்படியாக வைக்க வேண்டும். கட்டை விரல்கள் மேல் நோக்கி இருக்குமாறு இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடம் வரை சாப்பிடுவதற்கு முன் செய்ய வேண்டும்.
முத்திரை
இந்த எளிய முத்திரை மூலம் கணையத்தை சிறப்பாக இயங்க வைக்க முடியும். இந்த முத்திரையை தொடர்ந்து செய்வதால் சுகர் வராமல் தடுக்க முடியும். வெரிகோஸ் வெயின் நோயை குணமாக்க இந்த முத்திரையினை தொடர்ந்து செய்து வர வேண்டும்.

உணவு
முருங்கைக்கீரை வாரத்தில் ஒரு நாள் சாப்பிடுவது நல்லது. நாவல் பழக்கொட்டையை பொடி செய்து தண்ணீரில் கலந்து வாரத்தில் இரண்டு நாட்கள் சாப்பிட வேண்டும். சுக்குமல்லி காபி பால் சேர்க்காமல் குடிக்க சிறந்த பலனை தரும்.