இயக்கம்
நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கு வீர வணக்கங்கள் என்ற இயக்கத்தை 26ம் தேதி பிரதமர் துவக்கி வைக்கின்றார்.
செய்திக்குறிப்பு
75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களை கவுரவிக்கும் வகையில் வீர வணக்கங்கள் இயக்கம் பிரதமரால் துவக்கி வைக்கப்படுகிறது. இதனால் தியாகிகளின் 5,000 குடும்ப உறுப்பினர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர். இந்த கவுரவிக்கும் நிகழ்ச்சி 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 15 வரை நடைபெற உள்ளது.

மரியாதை
நாடு முழுவதும் உள்ள தேசிய மாணவர் படை இந்த பாராட்டு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளன. துவங்கும் தினமான 26 தமிழகம், புதுச்சேரி, அந்தமான் தேசிய மாணவர் படை 20 தியாகிகளின் குடும்பங்களுக்கு மரியாதை செலுத்த உள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.