Wednesday, May 18, 2022
HomeIndia2022 Top 10 Richest People! : 2022 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் டாப் 10...

2022 Top 10 Richest People! : 2022 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியல்!

பத்திரிக்கை

2022ம் ஆண்டிற்கான உலக பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் வணிக பத்திரிக்கை தற்போது வெளியிட்டுள்ளது. இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதல் இடத்திலும், அதானி இரண்டாம் இடத்திலும் உள்ளனர். உலக அளவில் பணக்காரர்கள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

உலக பணக்காரர்

உலக பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் முதல் இடத்தில் உள்ளார். அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் 2ஆம் இடத்தில் உள்ளார். டாப் 10 உலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி பத்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

இந்தியாவின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியல்

  • முதல் இடத்தில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி – சொத்து மதிப்பு 90.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
  • இரண்டாம் இடத்தில் அதானி குழும நிறுவனர் கவுதம் அதானி – சொத்து மதிப்பு 90 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
  • 3 ஆம் இடத்தில் எச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடார் – சொத்து மதிப்பு 28.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
  • நான்காம் இடத்தில் சீரம் இன்ஸ்டிடியூட் நிர்வாக இயக்குனர் சைரஸ் பூனவல்லா – சொத்து மதிப்பு 24.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
  • 5 ஆம் இடத்தில் டி-மார்ட் நிறுவனர் ராதாகிஷன் தமானி – சொத்து மதிப்பு 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
  • ஆறாம் இடத்தில் ஆர்சிலர் மிட்டல் நிறுவன தலைவர் லட்சுமி மிட்டல் – சொத்து மதிப்பு 17.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
  • ஏழாம் இடத்தில் ஓ.பி.ஜிண்டால் குழும தலைவர் சாவித்திரி ஜிண்டால் – சொத்து மதிப்பு 17.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
  • 8 ஆம் இடத்தில் ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா -சொத்து மதிப்பு 16.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
  • ஒன்பதாம் இடத்தில் சன் பார்மா நிறுவனர் திலீப் சாங்க்வி – சொத்து மதிப்பு 15.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
  • பத்தாம் இடத்தில் கோட்டாக் மஹிந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநர் உதய் கோட்டாக் -சொத்து மதிப்பு 14.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments