Malayalam actress Sahana! : மலையாள நடிகை சஹானா இளம் வயதிலேயே தற்கொலை.!

0
129

சஹானா

கேரள மாநிலம் காசர்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சஹானா. முழுநேர மாடலாகவும், அவ்வப்போது படங்களிலும் நடித்து வரும் இவர் அவரது கணவருடன் வசித்து வருகிறார். சஹானாவுக்கும், சஜ்ஜாத்துக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

அதிர்ச்சி

சஹானா அவரது 21 ஆவது பிறந்தநாளன்று வீட்டின் ஜன்னல் ஓரத்தில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியுள்ளார். சஹானாவின் பரிதாப மரணம் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சஜ்ஜத்தை காவலில் எடுத்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணையினை நடத்தி வருகின்றனர்.

தாயின் கருத்து

அவரது தாய், என் மகள் எப்போதும் அவரது கணவர் செய்த கொடுமைகளை பற்றி பேசுவார் என கூறி உள்ளார். நிச்சயம் தற்கொலை செய்திருக்க மாட்டாள் என்றும், பிறந்தநாளை கொண்டாட அவர்களை அழைத்ததாகவும் கூறியுள்ளார்.

மர்மம்

சஹானாவின் உறவினர்கள் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். சஹானாவின் இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடிகை மரணத்தில் உள்ள மர்மம் விரைவில் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here