George Bush! : ஜார்ஜ் புஷ்ஷை கொல்ல சதி திட்டம் தீட்டியவர் கைது!

0
68

கைது

ஈராக் மீது போர் தொடுத்ததற்காக அமெரிக்கா முன்னாள் அதிபரான ஜார்ஜ் புஷ்ஷை கொல்வதற்காக சதி திட்டம் தீட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை அமெரிக்க நீதித்துறை அறிவித்துள்ளது.

குற்றச்சாட்டுகள்

ஜார்ஜ் புஷ்ஷை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய ஷாகிப் அகமது என்பவர் நேற்றைய தினம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரின் மீது உச்சநீதிமன்றத்தில் குடிபெயர்வோர் செய்யும் குற்றம், அமெரிக்க முன்னாள் அதிகாரி, தலைவரை கொல்ல முயற்சி போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.

ஷாகிப் கூறியவை

கொலம்பஸ் பகுதியில் வசித்த ஷாகிப் எப்பிஐ அமைப்புகளுக்கு தகவல் அளிக்கும் நபரை தொடர்பு கொண்டு கொலை செய்யும் திட்டத்தை விளக்கி உள்ளார். ஈராக் மீது போர் தொடுத்ததற்கும், பல ஈராக்கியர்கள் அகதிகளாக வெளியேறியதற்கும் அவரை கொல்ல திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

திட்டம்

சதி திட்டத்தை நிறைவேற்ற மெக்சிகோ எல்லை வழியாக 4 ஈராக்கியர்களை அமெரிக்காவிற்குள் அழைத்து வரவும் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். இதில் இரண்டு நபர்கள் ஈராக் உளவுத்துறையில் பணியாற்றியவர்கள் என்றும், பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்றும் கூறியுள்ளான்.

ஆய்வு

ஜார்ஜ் புஷ் தொடர்புடைய இடங்களுக்கு சென்று ஆய்வுகள் செய்தனர். கொலை செய்வதற்கு தேவையான ஆயுதங்கள், சீருடைகள் குறித்து அவரிடம் விவாதித்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here